ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் 198 புள்ளிகள் பெற்று வட மாகாணத்தில் முதலாவது இடம் பிடித்த தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி மாணவி சுபாஸ்கரன் ஜனுஸ்காவை புளொட் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் ஆகியோர் நேரில் சென்று சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தனர்.