பூஸா சிறைச்சாலையில் இருந்து பிணையில் விடுதலையான நபருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக, காலி மாவட்ட தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.இவர் யக்கலமுல்ல –படகெட்டிய பகுதியைச் சேர்ந்தவரென தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 11 ஆம் திகதியே இவர் சிறைச்சாலையில் இருந்து விடுதலையாகியுள்ளார்.

பூஸா சிறையில் ஏற்கெனவே தொற்றாளராக இனங்காணப்பட்டவரிடமிருந்து இவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.