கொரோனா வைரஸ் பரவலையடுத்து நாடு திரும்ப முடியாமல் இருந்த மேலும் 381 பேர், கட்டுநாயாக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.ஐக்கிய அரபு இராச்சியம், மலேசியா, இந்தியா ஆகிய நாடுகளில் இருந்து இவர்கள் நாடு திரும்பியுள்ளனர்.

நாட்டை வந்தடைந்த அனைவரும் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதன் பின்னர், தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளனர்.