நாடுபூராகவும் தற்போது 77,531 பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனரென, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.மேலும் முகக் கவசம் அணியாமை, சமூக இடைவெளியைப் பேணாதமை தொடர்பில் இதுவரை 297 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சுயதனிமையில் இருப்பவர்கள், தத்தமது வீடுகளிலிருந்து வெளியில் சென்று வருகின்றமை தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் இவ்வாறனவர்களுக்கு எதிராக, தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தூர இடங்களிலிருந்து ரயில், பஸ்கள் மூலம் கோட்டை மற்றும் புறக்கோட்டைக்கு வரும் பயணிகள், குறித்த பிரதேசங்களில் சுற்றித்திரிவதைத் தவிர்க்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.