பாடசாலைகள் யாவும் 23ஆம் திகதி முதல் திறக்கப்படும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.தரம்-6 முதல் 13 வரையான வகுப்புகள், அன்றைய தினம் முதல் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது.

இதேவேளை,  மேல் மாகாணம் உள்ளிட்ட தனிமைப்படுத்தல் பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளை தவிர்த்து ஏனைய பாடசாலைகளே அன்றையதினம் திறக்கப்படும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.