இத்தாலியில் தங்கியிருந்த மேலும் 116 இலங்கையர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.இத்தாலியின் மிலான் நகரில் இருந்து ஸ்ரீ லங்கன் விமான சேவைக்குச் சொந்தமான யூ.எல் 1208 ரக விசேட விமானத்தில் இவர்கள் பிற்பகல் 1.25 மணி அளவில் விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

விமான நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள சுகாதார அமைச்சுக்கு சொந்தமான பீ.சீ.ஆர் பரிசோதனை கூடத்தில் இவர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இதனைத்தொடர்ந்து இராணுவத்தினர் இவர்களை தனிமைப்படுத்தலுக்காக அழைத்துச் சென்றனர்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)