தனிமைப்படுத்தல் உட்படுத்தப்பட்டுள்ள சில பகுதிகளில் நாளை தனிமைப்படுத்தல் நீக்கப்பட உள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.நாளை காலை 5 மணி முதல் இவ்வாறு தனிமைப்படுத்தல் நீக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாவட்டத்தில் பொரள்ள, வெல்லம்பிட்டிய, கோட்டை மற்றும் கொம்பனிதெரு ஆகிய பகுதிகளில் தனிமைப்படுத்தல் நீக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் கொழும்பு மாவட்டத்தில் 13 பொலிஸ் பிரிவுகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலில் இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கம்பஹா மாவட்டத்தல் ஜாஎல மற்றும் கடவத்த பகுதிகளில் தனிமைப்படுத்தல் நீக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் கம்பஹா மாவட்டத்தில் 5 பொலிஸ் பிரிவுகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலில் இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.