ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்தார்.

கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் இன்று (23) நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சியின் பிரதிநிதிகள் இந்த நியமனம் தொடர்பில் எழுத்துமூல கோரிக்கையை முன்வைத்ததாகவும் அவர் கூறினார்.

நாடு எதிர்நோக்கியுள்ள இக்கட்டான சூழ்நிலையில் அனுபவம் வாய்ந்த ஒருவரான ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் இருக்க வேண்டியது அவசியம் என இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட உறுப்பினர்கள் ரணில் விக்ரமசிங்கவிடம் சுட்டிக்காட்டியதாக அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார்.

அடுத்த வாரமளவில் இது தொடர்பிலான இறுதி தீர்மானத்தை அடைய முடியும் எனவும் அவர் மேலும் கூறினார்