சாவகச்சேரி பொலிஸ் பிரிவில் 6 இளைஞர்கள் வாளுடன் கைது இன்று (23) செய்யப்பட்டுள்ளனர்.இந்த 6 இளைஞர்களும் பயணித்த வாகனத்தை சோதனை செய்யும்போது வாள் 1 மீட்கப்பட்டதாகவும், அந்த வாள்களை வைத்திருந்த இவர்கள் என்ற அடிப்படையில் யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த 6 இளைஞர்கள் சாவகச்சேரிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஆறு பேரிடமும் விசாரணைகள் மேற்கொண்டு வருவதாகவும் விசாரணைகளின் பின்னர் குறித்த இளைஞர் களையும் சாவகச்சேரி நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.