கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 337 பேர் நேற்று(23) அடையாளம் காணப்பட்டுள்ளனரென, சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.இதற்கமைய, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,508 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை கொரோனா தொற்றினால் 3 மரணங்களும் நேற்று(23) பதிவாகியுள்ளன.  தொற்றிலிருந்து இதுவரை 14,497 பேர் பூரண குணமடைந்துள்ள அதேவேளை, 5,921 பேர் தொடர்ந்தும் சிகிச்சைபெற்று வருகின்றனர்.