இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் நாளை (27) இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.இலங்கை, இந்தியா மற்றும் மாலைத்தீவுகளுக்கு இடையிலான முத்தரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக அவர் நாட்டிற்கு வருகை தருவதாக ‘த ஹிந்து’ செய்தி வௌியிட்டுள்ளது.

மாலைத்தீவு பாதுகாப்பு அமைச்சர் மரியா அஹ்மட் தீதியும் இந்த சந்திப்பில் கலந்துகொள்ளவுள்ளார்.

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் இலங்கைக்கு மேற்கொள்ளும் இரண்டாவது உத்தியோகபூர்வ விஜயம் இதுவாகும்.

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் இருதரப்பினருடனும் தனிப்பட்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவாரா என்பது தொடர்பில் இதுவரை எவ்வித உத்தியோகபூர்வ தகவல்களும் வௌியாகவில்லை.

இவ்வாறான முத்தரப்பு பேச்சுவார்த்தை கடந்த 2014 இல் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.