கிளிநொச்சி மாவட்டத்தில் மேலும், ஐவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு ள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.கிளிநொச்சி, 55ஆம் கட்டையில் உள்ள ஒயில் கடையில் பணியாற்றும் முதியவருக்கு கொரோனா வைரஸ் உள்ளமை ஏற்கெனவே கண்டறியப்பட்டது.

இதனைத் தொடர்ந்து,அவரின் குடும்பத்தினர் மற்றும் அவருடன் பணியாற்றியோர் தனிமைப் படுத்தப்பட்டு  பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.  இதன்போது, வயோதிபரின் மருமகன் உறவுமுறையான ஒருவருக்கும்  ஒயில் கடையில் பணியாற்றும் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.

மேலும்,மேல் மாகாணத்துக்குச் சென்று குடிதண்ணீர் போத்தல்களை எடுத்துவந்து கிளிநொச்சி மாவட்டத்தில் விநியோகிக்கும் முகவர் நிறுவனத்தைச் சேர்ந்த மூன்று பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டு ள்ளதாகவும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.