கடந்த 24 மணிநேரத்தில் இலங்கையில் அடையாளம் காணப்பட்ட 559 தொற்றாளர்களுள் 253 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்களென, கொரோனா பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.இதில் ஆகக் கூடிய தொற்றாளர்கள் தெமட்டகொட பிரதேசத்தில் பதிவாகியுள்ளதாகவும் இதற்கமைய, அங்கு 50 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனரென தெரிவிக்கப்பட்டுள்ளது.