அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ளதோடு,  கல்முனை சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட பிரிவில் 65ஆகவும் அதிகரித்துள்ளது.கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேற்குறித்தப் பிரதேசங்களில் மேலும் அதிகரிக்களாமென எச்சரித்துள்ள ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.அகிலன்,முகக்கவசம் அணிவது கட்டாயமெனவும் தெரிவித்தார்.