பொகவந்தலாவை பொது சுகாதார பரிசோதகப் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சுயதனிமைப்படுத்தப்பட்ட குடும்பத்தில் பெண் ஒருவர் இன்று (28) உயிரிழந்துள்ளார்.பொகவந்தலாவை – கெம்பியன் கீழ் பிரிவை சேர்ந்த 69 வயதுடைய,  நான்கு பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் மகள், பேரப்பிள்ளை கடந்த 16ஆம் திகதி பத்தரமுல்ல பகுதியிலிருந்து வீடு திரும்பியிருந்த நிலையில், அவரதுக் குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டனர். இந்த நிலையில் இவர் திடீரென உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவருக்குப் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, பரிசோதனை முடிவின் பின்னர் பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.