மாலைத்தீவின் பாதுகாப்பு அமைச்சர் மரியா அஹ்மட் டிடி உள்ளிட்டத் தூதுக் குழு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை அவரது விஜேராம இல்லத்தில் நேற்று (27) சந்தித்துள்ளது.போதைப்பொருள், பாதாள உலகக் கோஷ்டி உள்ளிட்ட சட்டவிரோத வியாபாரங்கள், சிறைச்சாலை புணரமைப்பு, பயங்கரவாதம், அடிப்படைவாத, பாதுகாப்பு ஒத்துழைப்புகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.