முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரண்டு இளைஞர்கள் 200 கிராம் C 4 வெடிமருந்துடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.வனப்பகுதி ஒன்றில் இருந்து குறித்த C 4 வெடிமருத்துகளை மீட்டதாகவும் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் தப்பிச் சென்றுள்ளதாகவும் இரண்டு இளைஞர்கள் 200 கிராம் C 4 வெடிமருந்துடன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்டவர்கள் உடையார்கட்டு பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.