கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் நிலைமைகள் தொடருமாக இருந்தால், கல்வி பொதுத் தரா தர சாதாரணத் தரப் பரீட்சை மேலும் காலந்தாழ்த்தப்படுமென கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பிரிஸ் தெரிவித்துள்ளார்.இன்றைய நாடாளுமன்ற அமர்வில், ஆளுங்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஷாந்த பண்டாரவின் வாய்மூல விடைக்கான வினாவுக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

சாதாரணத் தரப் பரீட்சை தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ள ஜனவரி 18 – 27ஆம் திகதிகளில் நடத்துவதுத் தொடர்பான இறுதித் தீர்மானம் ஒருவாரத்தில் அறிவிக்கப்படுமெனவும்
அவர் மேலும் தெரிவித்துள்ளார்.