சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1091 ஆக பதிவாகியுள்ளது.இன்று 183 கொரோனா நோயாளர்கள் பதிவாகியதாக சிறைச்சாலைகள் நிர்வாக ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க குறிப்பிட்டார்.

இவர்கள் அனைவரும் மஹர சிறைச்சாலையில் உள்ளவர்கள் என அவர் கூறினார்.

இதுவரை வெலிக்கடை சிறைச்சாலையில் 386 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் நிர்வாக ஆணையாளர் தெரிவித்தார்.

கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் 157 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரையில் 58 சிறை அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 06 பேர் குணமடைந்துள்ளனர்.

சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் இதுவரை 113 கைதிகள் குணமடைந்துள்ளதாக சிறைச்சாலைகள் நிர்வாக ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க கூறினார்.