நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 116 ஆக அதிகரித்துள்ளது.நேற்று 7 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

இதில் ஐவர் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதுடன், ஏனையோர் புத்தளம், அக்குரஸ்ஸ பகுதிகளை சேர்ந்தவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நேற்று 496 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புடையவர்களாவர்.

அதன் பிரகாரம், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 23,484 ஆக அதிகரித்துள்ளது.

COVID தொற்றுக்குள்ளான 346 பேர் நேற்று குணமடைந்தனர்.

கொவிட் 19 தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 17,002 ஆக அதிகரித்துள்ளது.

தொற்றுக்குள்ளான 6,366 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.