புதிய பொலிஸ்மா அதிபர் சி.டீ.விக்ரமரத்ன அவர்கள் இன்று (30) திங்கட்கிழமை முற்பகல் விஜேராமவிலுள்ள பிரதமரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தார்.35ஆவது பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து சி.டீ.விக்ரமரத்னஉத்தியோகப்பூர்வமாக​ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து தனது சேவை குறித்து கலந்துரையாடினார்.

புதிய பொலிஸ்மா அதிபருக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாட்டின் பாதுகாப்பு நிலைமை மற்றும் பொலிஸ் துறையின் தற்போதைய பணிகள் என்பன குறித்தும் கேட்டறிந்தார்.

இலங்கை பொலிஸ் துறையை முன்னோக்கி கொண்டு செல்லல், தேசிய ரீதியிலான பொறுப்புகளை தவறாது செயற்படுத்துதல் என்பன தொடர்பில் புதிய பொலிஸ்மா அதிபர் நம்பிக்கை வெளியிட்டார்.

நாட்டிற்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் கொவிட்-19 தொற்று நிலைமையிலிருந்து இலங்கை மக்களை பாதுகாப்பதற்கு இலங்கை பொலிஸ் முன்னெடுத்துவரும் நடவடிக்கைகள் தொடர்பில் பிரதமர் பாராட்டு தெரிவித்தார்.