மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையை தொடர்ந்து ஏற்பட்ட மோதலில் இதுவரை 08 பேர் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

மேலும் பிணைக் கைதிகளாக இருந்த இரண்டு சிறை அதிகாரிகளும் மீட்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

தற்போதைய நிலையில் சிறைச்சாலை கிட்டத்தட்ட விசேட அதிரடிப் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

இதேவேளை, பிணை கைதிகளாக இருந்து மீட்கப்பட்ட சிறை அதிகாரிகளில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.