நாடளாவிய ரீதியுள்ள சகல சிறைச்சாலைகளிலும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான கைதிகளின் எண்ணிக்கை 1,098 ஆகும் என, சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணான்டோபுள்ளே தெரிவித்தார்.

வெலிக்கடை சிறைச்சாலையில்-386, மெகஷின் சிறையில் -46, ​கொழும்பு விளக்கமறியல் சிறையில்-157, மஹவில் -198, குருவிட்ட சிறையில்-32 மற்றும் ​பழைய போகம்பறை சிறைச்சாலையில் 175 கைதிகளுக்கும் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.

சபையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் சுதர்ஷின் பெர்ணான்டோபுள்ளே மேற்கண்டவாறு தெரிவித்தார்.