கைதிகளுக்கு பிணை வழங்குவதற்குரிய வினைத்திறனான நடவடிக்கை ஒன்றை திட்டமிடுமாறு சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா, பொலிஸ் மா அதிபருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.இந்த திட்டத்தினூடாக எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் பிணை வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் சட்ட மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.

சிறைச்சாலைகளில் நிலவும் நெருக்கடியை குறைக்கும் நோக்கில் இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலைகளில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதை கருத்தில் கொண்டு இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக சட்ட மா அதிபரின் இணைப்பதிகாரி, அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன குறிப்பிட்டுள்ளார்.