சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் கைதிகளின் புனர்வாழ்வுக்கான இராஜாங்க அமைச்சராக லொஹான் ரத்வத்தே பதவிப்பிரமாணம் செய்துள்ளார்.ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ முன்னிலையில் இன்று (02) முற்பகல் அவர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

ஜனாதிபதி செயலகத்தில் பதவிப் பிரமாண நிகழ்வு இடம்பெற்றது.

மாணிக்க கல் மற்றும் தங்காபரணம் தொடர்பான கைத்தொழில் இராஜாங்க அமைச்சராகவும் லொஹான் ரத்வத்தே செயற்படுகிறார்.