சீரற்ற வானிலையால் வட மாகாணத்தின் அனைத்து பாடசாலைகளும் நாளை (03) மற்றும் நாளை மறுதினம் (04) மூடப்படவுள்ளன.இது குறித்து அனைத்து அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக வட மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, சீரற்ற வானிலையால் கிழக்கு மாகாணத்தின் அனைத்து பாடசாலைகளும் இன்று (02) முதல் எதிர்வரும் வௌ்ளிக்கிழமை வரை மூடப்பட்டுள்ளன.

மாகாண மக்களுக்கு ஏற்படக்கூடிய அசௌகரியங்களை கருத்திற் கொண்டு பாடசாலைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏதேனும் விதத்தில் பாதிக்கப்படக்கூடிய மக்களின் இடைத்தங்கல் முகாம்களாக பாடசாலைகளை பயன்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.