நாடாளுமன்ற பிரதி பொது செயலாளராகவும் அலுவலக சபையின் பிரதானியாகவும் சட்டத்தரணி குசானி ரோஹணதீர நியமிக்கப்பட்டுள்ளார்.நாடாளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக தசநாயக்கவின் பரிந்துரைக்கு அமைய, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவால் இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற பொதுச் செயலாளரும் அலுவலக சபையின் பிரதானியுமான நீல் இந்தவல மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதியாக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டதையடுத்து, ஏற்பட்ட வெற்றிடத்துக்கே குசானி ரோஹணதீர நியமிக்கப்பட்டுள்ளார்.