ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்(புளொட்) செட்டிகுளம் பிரதேச மக்கள் இணைப்பகம் கட்சியின் மாவட்ட அமைப்பாளரும் நகரசபை உறுப்பினருமான க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்களின் தலைமையில் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.இன்று முற்பகல் இடம்பெற்ற இநநிகழ்வில் கட்சியின் உப தலைவரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான ஜி.ரி.லிங்கநாதன், வவுனியா நகர சபை உறுப்பினர் சு.காண்டீபன், பிரதேச சபை உறுப்பினர்களான சு.ஜெகதீஸ்வரன்(சிவம்), பரிகரன், நிருஜன், சுஜீவன், த.யோகராஜா, வே.குகதாசன், நந்தகுமார் ஆகியோருடன் கட்சி உறுப்பினர்கள் இந்திரமூர்த்தி, சிவா மற்றும் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தார்கள்.