வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருவதற்கு ஏதுவாக கொரோனா சுகாதார வழிகாட்டுதல்களின் படி இலங்கையிலுள்ள விமான நிலையங்களை மீண்டும் திறப்பதற்குத் திட்டமிடப்பட்டிருப்பதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.சுகாதார அதிகாரிகளின் அனுமதி கிடைத்தவுடன் விமான நிலையத்தை மீண்டும் திறக்க முடியும் என்றும், இது தொடர்பாகச் சுகாதார அதிகாரிகளுடன் நேற்று விசேட கலந்துரையாடல்   இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.