சூறாவளி காரணமாக 06 மாவட்டங்களை சேர்ந்த 44,848 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.13,368 குடும்பங்களை சேர்ந்தவர்களே பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் 2,236 குடும்பங்களை சேர்ந்த 7,749 பேர்

யாழ். மாவட்டத்தில் 9,346 குடும்பங்களை சேர்ந்த 31,703 பேர்

கிளிநொச்சி மாவட்டத்தில் 928 குடும்பங்களை சேர்ந்த 2,789 பேர்

முல்லைத்தீவு மாவட்டத்தில் 450 குடும்பங்களை சேர்ந்த 1,149 பேர்

வவுனியா மாவட்டத்தில் 137 குடும்பங்களைச் சேர்ந்த 424 பேர்

திருகோணமலையில் 79 குடும்பங்களை சேர்ந்த 265 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீரற்ற வானிலையால் யாழ் மாவட்டத்தில் 4 பேர் காயமடைந்துள்ளதுடன் ஒருவர் காணாமல் போயுள்ளார்.

இதேவேளை, Burevi சூறாவளியால் 12 மாவட்டங்களில் 2,467 கட்டடங்களுக்கு சேதமேற்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

50 வீடுகள் முழுமையாகவும் 2,148 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாகவும் நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும், சிறு மற்றும் மத்திய தர 289 வர்த்தக நிலையங்களுக்கும் சேதமேற்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், இழப்பீடுகள் தொடர்பான மதிப்பீட்டின் போது முதல் சந்தர்ப்பத்தில் 10,000 ரூபா நிவாரணம் வழங்க எதிர்பார்த்துள்ளதாக மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.

மீனவர்கள் மற்றும் கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

Burevi சூறாவளியானது ​(03) நேற்று மாலை 5.30 மணிக்கு நாட்டை விட்டு நகர்ந்தது.

இதனால் புத்தளத்தில் இருந்து மன்னார் மற்றும் காங்கேசன்துறையினூடாக முல்லைத்தீவு வரையிலான ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பிராந்தியங்கில் காற்றின் வேகம் 60 முதல் 80 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இதனால் இன்றிரவு (04) வரை குறித்த கடற்பிராந்தியங்களில் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என மீனவர்கள் மற்றும் கடற்றொழிலாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

எனினும், எதிர்பார்க்கப்பட்ட மழைவீழ்ச்சி பதிவாகவில்லை என நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனால், பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டத்தில் அதிகரிப்பு பதிவாகவில்லை எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், நீர்த்தேக்கங்களில் தற்போது காணப்படும் நீரின் அளவு, பெரும்போகத்தில் மேலும் ஒரு மாத காலத்துக்கு தேவையான நீர் விநியோகத்தை மாத்திரம் மேற்கொள்ள போதுமானதாகவுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் மேலும் தெரிவித்துள்ள