வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெற்றுச் சென்ற நிலையில் கொரோனா தொற்று காரணமாக அங்கு சிக்கியிருந்த மேலும் 476 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.டுபாயில் இருந்து 130 பேரும், ஜப்பானில் இருந்து 07 பேரும் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாடு திரும்பியுள்ளனர்.

அத்துடன், மத்தல விமான நிலையத்தின் ஊடாக  294 பேர் நாடு திரும்பியுள்ளனர்.

இதேவேளை, மேலும் 288 இலங்கையர்கள் வேலைவாய்ப்பு பெற்று வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

டுபாய் நோக்கி 219 பேரும் கட்டாருக்கு 69 பேரும் இவ்வாறு சென்றுள்ளனர்.