கண்டி திகன பகுதிக்கு அருகில் இன்றும் (05) சிறிய அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.இன்று காலை 5.41 மணியளவில் திகன அளுத்வத்த பகுதியில் இவ்வாறு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

திகன பகுதிக்கு அருகில் கடந்த மாதத்தில் மாத்திரம் 6 முறை இவ்வாறு சிறிய அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

இது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்ற போதிலும் இதற்கான காரணம் இதுவரையில் இனங்காணப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.