நாட்டில் நேற்று மேலும் 7 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக  அரசாங்கத் தகவல்கள் திணைக்களம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் அடிப்படையில்,கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மரணமடைந்தோர் எண்ணிக்கை  137 ஆகும்.

பண்டாரகம பிரதேசத்தைச் சேர்ந்த 91 வயதுடைய ஆண் ஒருவரும், தெமட்டகொட பிரசேத்தைச் சேர்ந்த 56 வயதுடைய பெண் ஒருவரும், பண்டாரகம பிரதேசத்தைச் சேர்ந்த 81 வயதுடைய பெண் ஒருவரும், கொழும்பு 13 பிரதேசத்தைச் சேர்ந்த 84 வயதுடைய பெண் ஒருவரும், வெல்லம்பிடிய பிரதேசத்தைச் சேர்ந்த 62 வயதுடைய பெண் ஒருவரும் மற்றும் 53 மற்றும் 66 வயதுடைய சிறைக் கைதிகள் இருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல்கள் திணைக்களம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.