இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 27 ஆயிரத்தை தாண்டியுள்ளது.மேலும் 168 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாக தொற்று நோயியயல் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, இன்று மொத்தமாக 669 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி இலங்கையில் இதுவரையில் 27 ஆயிரத்து 228 பேருக்குகொரோனா வைரஸ் தொற்று உறுதியானதாக தொற்று நோயியயல் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன்,  தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 20 ஆயிரத்து 90ஆக உயர்வடைந்துள்ளதுடன்,  தற்போது 7ஆயிரத்து 8 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.