முக்கியப் பிரமுகர்களின் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுவரும் 44 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகப் தகவல்கள் வெளியாகியுள்ளன.பொலிஸ் விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த 264 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், 1277 பொலிஸாருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாகவும் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருந்த 925 பொலிஸார் குணமடைந்திருப்பதாகவும், 352 பொலிஸார் தொடர்ந்து சிகிச்சைப் பெற்றுவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.