கொரோனா ​வைரஸ் தொற்றுக்குள்ளாகி மரணித்தவர்களின் எண்ணிக்கை, நேற்று (05) சனிக்கிழமையுடன் 137 ஆக அதிகரித்தது. நேற்றைய அறிக்கையின் பிரகாரம் ஏழு ​பேர் மரணமடைந்துள்ளனர்.இந்நிலையில், வயது இடைவெளியின் அடிப்படையில் மரணித்தவர்களின் விவரம் ​வெளியாகியுள்ளது.

அதில்,

10 வயதுக்கும் 30 வயதுக்கும் இடையில் மூவரும்,

31 வயதுக்கும் 40 வயதுக்கும் இடையில் நால்வரும்

41 வயதுக்கும் 50 வயதுக்கும் இடையில் 13 பேரும்

51 வயதுக்கும் 60 வயதுக்கும் இடையில் 21 பேரும்

61 வயதுக்கும் 70 வயதுக்கும் இடையில் 24 பேரும்

71 வயதுக்கும் மேல் 50  பேரும்

மரணமடைந்துள்ளனர் என அந்த தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.