கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக மேல் மாகாணத்தில் மேலும் புதிய பிரதேசங்கள் நாளை (7) காலை 5 மணியிலிருந்து முடக்கப்படவுள்ளன.இதற்கமைய, கொம்பனித்தெரு பொலிஸ் பிரிவின் ஹுனுப்பிட்டிய கிராம உத்தியோகத்தர் பிரிவு, கருவாத்தோட்ட பொலிஸ் பிரிவின் 60ஆம் தோட்டம், வெள்ளவத்தை- கோகிலா வீதி என்பன தனிமைப்படுத்தப்படவுள்ளன.

அத்துடன் வத்தளை பொலிஸ் பிரிவில் கெரவலப்பிட்டிய கிராம உத்தியோகத்தர் பிரிவு, ஹேகித்த, குருந்துஹேன, அவரிவத்த,வெலிகடமுல்ல ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்படவுள்ளன.

அத்துடன் பேலியகொட பொலிஸ் பிரவின் பேலியகொடவத்த, கஹபட, மீகாஹவத்த,பட்டிய வடக்கு ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் கிரிபத்கொட பொலிஸ் பிரிவின் வெலேகொட வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் தனிமைப்படுத்தப்படவுள்ளன.