முன்னாளர் அமைச்சர் டி.பீ.ஏக்கநாயக்க காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 67ஆகும்.குருநாகலில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்தநிலையிலேயே இன்று (06) காலமானார்.

அவர், கடந்த பொதுத் ​தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்டார். எனினும், வெற்றியீட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.