மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் ஊழியர்களுக்கு இடையே ஏற்பட்ட கொரோனா வைரஸ் தொற்று உக்ரேனிலிருந்து வருகை தந்த விமான ஊழியரால் ஏற்பட்டது என்று நம்பப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இராஜாங்க அமைச்சர், மருத்துவர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே நாடாளுமன்றில் இன்று (07) இதனைக் கூறியுள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திசாநாயக்க, எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்தார்.