நேற்று இலங்கையில் 649 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இதில் 295 பேர் கொழும்பில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொரோனா பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.இதில் 49 தொற்றாளர்கள் வெள்ளவத்தையில் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், மட்டக்குளியில் 29 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கொம்பனி வீதியில் 7 பேரும் கொட்டாஞ்சேனையில் 21 பேரும் தெமட்டகொடயில் 22 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.