இலங்கையில் கொவிட்-19 தொற்றினால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 142ஆக உயர்ந்துள்ளது.உரிய வசிப்பிட முகவரி தெரியாத கொழும்பு பகுதியை சேர்ந்த 62 வயதான ஆண் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையிலிருந்து ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றுடன் ஏற்பட்ட நியுமோனியா நிலைமையே உயிரிழப்புக்கான காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.

இதேவேளை, கொழும்பு 13 ஜம்பட்டா வீதியைச் சேர்ந்த 77 வயதான ஆண் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார். கொழும்பு தேசிய வைத்தியசாலையிலிருந்து ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.

கொவிட்-19 தொற்றுடன், நீரிழிவு நோய் காணப்பட்டமையே இந்த உயிழப்புக்கான காரணம் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.