நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 703 பேர் நேற்றைய தினம் (07) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இவர்களில் அதிக எண்ணிக்கையான 371 பேர் கொழும்பு மாவட்டத்திலே பதிவாகியுள்ளனர்.

அவர்களில் கொழும்பு மாவட்டத்தின் பொரளையில் 182 பேரும் வௌ்ளவத்தை பிரதேசத்தில் 22 பேரும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கம்பஹா மாவட்டத்தில் 102 பேரும் நுவரெலியா மாவட்டத்தில் 22 பேரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒருவரும் அடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

நாட்டில் இதுவரை 28,579 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் 142 பேர் உயிரிழந்துள்ள குறிப்பிடத்தக்கது.