அடுத்த ஆண்டு தொடக்கம் மின் கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் முயற்சித்து வருவதாக நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாக்கும் தேசிய அமைப்பு தெரிவித்துள்ளது. ஒரு மின் அலகுக்கு 50 ரூபாய் என்ற அதிக கட்டணத்தை அறவிட அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது. இலங்கை மின்சார சபை, தனியார் நிறுவனங்களில் இருந்து அதிக விலைக்கு மின்சாரம் பெற்றுக் கொண்டமையால், அரசாங்கத்துக்கு 300 பில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாது என்றும் ஆனால், எதிர்காலத்திலும் இவ்வாறான மின் கொள்வனவை மேற்கொள்ளத் தயாராகி வருவதாகவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

அதன்படி இலங்கை மின்சார சபையின் நட்டம் அடுத்த வருடமளவில் 500 ரூபாயாக மில்லியனாக அதிகரிக்கும் என்றும் அந்த நட்டத்தை ஈடுசெய்து கொள்ள அரசாங்கத்துக்கு இருக்கும் ஒரே வழி, நுகர்வோரிடம் இருந்து அதிக கட்டணத்தை வசூலிப்பதாகுமென நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பின் தலைவர் ரஞ்சித் விதானகே விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.