கொரோனா தொற்று காரணமாக வௌிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் 591 பேர் இன்று (09) அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.துபாயிலிருந்து 191 பேரும் மாலைதீவிலிருந்து 60 பேரும் ரியாத்திலிருந்து 293 பேரும் கத்தாரிலிருந்து 47 பேரும் இன்று அதிகாலை நாடு திரும்பியதாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் கடமை நேர முகாமையாளர் குறிப்பிட்டார்.

நாடு திரும்பிய அனைவருக்கும் PCR பரிசோதனையை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன் பின்னர் இவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.