மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் கான்ஸ்டபிள் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார் .

இச்சம்பவம், அம்பாறை – அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலமுனை பகுதியில் நேற்றிரவு (09) இடம்பெற்றுள்ளதுடன், சம்பவத்தில் தாஹிர் தஸ்பீக் (வயது-35) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையான பொலிஸ் கான்ஸ்டபிள் கொலை செய்யப்பட்டுள்ளார்.சம்பவம் தொடர்பில் 21 வயதான இளைஞன், அக்கரைப்பற்று பொலிஸாரால்  கைது செய்யப்பட்டுள்ளார்.

பாலமுனையில் அமைந்துள்ள தனது உறவினர் ஒருவரின் காணி எல்லைப் பிரச்சினை தொடர்பாக சமாதானம் செய்ய நேற்றிரவு கான்ஸ்டபிள் சென்றுள்ளார். இதன்போது இடம்பெற்ற வாக்குவாதத்தில் அவரது உறவினர் ஒருவரே அவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, இச்சம்பவத்தில் காயமடைந்து சிகிச்சை பெற அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இருவரில் ஒருவர் சந்தேகத்தின் பேரில் அக்கரைப்பற்று பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளார்.