நாட்டில் மேலும் இரண்டு கொரோனா மரணங்கள் சம்பவித்துள்ளன. இந்தவகையில் நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 144ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 30ஆயிரத்தைக் கடந்துள்ளது. நேற்று 694பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சிறைகளிலிருந்து 43பேரும், பேலியகொட கொத்தணியுடன் தொடர்புடைய 335பேரும் இதில் அடங்குகின்றனர். இதனடிப்படையில் நாட்டில் தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 30ஆயிரத்து 75ஆக பதிவாகியுள்ளது. நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 21ஆயிரத்து 800ஆக பதிவாகியுள்ளது. 8ஆயிரத்து 131கொரோனா நோயாளர்கள் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சைபெற்று வருவதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது.