யாழ்ப்பாணம் – தென்மராட்சி, நுணாவில் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த எரிபொருள் தாங்கி மீது காரொன்று, நேற்று (09) நண்பகல் 12 மணியளவில் மோதியதில் 6 வயது சிறுவனும் பெண்ணொருவரும் உயிரிழந்துள்ளனர். அத்துடன், மூவர் படுகாயமடைந்துள்ளனர். நுணாவில் சந்திக்கு அண்மையில் ரயர் கடைக்கு முன்பாக ரயர் திருத்த வேலைக்காக எரிபொருள் தாங்கி வாகனம் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. யாழ்ப்பாணம், சவகச்சேரியில் கொழும்பு நோக்கிப் பயணித்த மேற்படி கார், எரிபொருள் தாங்கி வாகனத்தின் பின் பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் படுகாயடைந்தவர்கள் உடனடியாகவே வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும் யோகதாஸ் மகிழன்  (வயது 06), ஆன் டேரோளினி (வயது 30) ஆகிய இருவரும் உயிரிழந்தனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், இந்த விபத்தில் ஆன் மக்கிலியோட் (வயது 6) என்ற சிறுவனும் கரோலின் (வயது 35) லேபோனியா என்ற இரு பெண்களும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்களில் சிறுவனும், லேபோனியாவும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் கரோலின் நெற்றி ,கைகள் ஏற்பட்ட சிறு காயம் காரணமாக  சிகிச்சை பெற்று வருகிறார் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.