வவுனியாவில் இன்றும் எதிர்வரும் சில தினங்களிலும் சுழற்சி முறையில் மின் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளது. இந்தவகையில் காலை 8மணி தொடக்கம் மாலை 5மணிவரை மின்சார விநியோகம் துண்டிக்கப்படுமென இலங்கை மின்சாரசபை அறிவித்துள்ளது. அத்தியாவசிய பராமரிப்பு நடவடிக்கைகளுக்காக மேற்படி மின்சார விநியோகம் துண்டிக்கப்படுவதாக மின்சார சபையின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதற்கமைய வவுனியா சூடுவெந்தபுலவு கிராமத்திற்கான மின்சார விநியோகம் இன்று துண்டிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 14 மற்றும் 15ம் திகதிகளில் புதிய சின்னக்குளம் மற்றும் அரசடிக்குளம் ஆகிய கிராமங்களில் மின் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளது. எதிர்வரும் 16ம் திகதி வவுனியா கோவில்குளம் 10ம் ஒழுங்கையிலிருந்து சிதம்பரபுரம் வரையிலான கிராமங்களில் மின் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளது.

எதிர்வரும் 17ம் திகதி அரசடிக்குளம் கிராமத்திலும், 18ம் திகதி வன்னி இராணுவப்படை முகாம், விமானப்படை முகாம் பகுதிகளிலும் மின் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளது. எதிர்வரும் 19ம் திகதி கோவில்குளம் 10ம் ஒழுங்கையிலிருந்து சிதம்பரபுரம் வரையிலான கிராமங்களில் மின் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளது.