தனிமைப்படுத்தப்பட்டுள்ள கொழும்பில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்களை அதிலிருந்து விடுவிப்பதற்கான முறைமையொன்று தயாரிக்கப்பட்டு வருவதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்ர சில்வா தெரிவித்துள்ளார். இதற்கமைய குறித்த அடுக்குமாடி குடியிருப்புக்களில் வசிப்பவர்களை பி.சி.ஆர் மற்றும் என்டிஜன் பரிசோதனைகக்கு உட்படுத்தும் நடவடிக்கை நேற்று முன்தினம் முதல் ஆரம்பக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பின் 14 மாடிக்குடியிருப்பு தொகுதிகள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. 6 வாரங்களுக்கும் மேலாக குறித்த மாடிக்குடியிருப்பு தொகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவற்றில் பலவற்றை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அறிவுறுத்தியுள்ளார். இதற்கமைய கொவிட்-19 அச்சுறுத்தல் அற்ற மாடிக்குடியிருப்பு தொகுதிகளை விடுவிப்பதற்காக நேற்று முன்தினம் முதல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

அந்த மாடிக்குடியிருப்புகளில் உள்ள சகலருக்கும் பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. அத்துடன் அந்த குடியிருப்பு தொகுதிகளில் உள்ள ஒரு வீட்டில் ஒரு நபர் என தெரிவு செய்து என்டிஜன் பரிசோதனையும் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார். இவ்வாறு நேற்று மட்டக்குளியின் ரந்திய உயன மாடிக்குடியிருப்பு தொகுதியில் ஆயிரத்து 24 பேருக்கு பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது. அவற்றில் குறைந்தளவிலானோருக்கே கொவிட் 19 தொற்றுறுதியானமை கண்டறியப்பட்டதாகவும் இராணுவ தளபதி லெப்டினன் ஜென்ரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.