சட்டமா அதிபர் திணைக்களத்துக்கான உத்தியோக விடுதி, வவுனியா, ஈரப்பெரியகுளம் பகுதியில் நேற்று (10) திறந்து வைக்கப்பட்டது. 2015ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு, தற்போது கட்டடப்பணிகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், இக்கட்டடத்தை, சட்டமா அதிபர் தபேர டி லிபேரா உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார். இந்தக் கட்டடம், தற்போதைய அரசாங்கத்தின் பங்களிப்போடு, இராணுவத்தினரின் நிர்மாணிப்பு பணியில் கட்டப்பட்டிருந்தது. இந்த நிகழ்வில், சட்டமா அதிபர் திணைக்கள நிர்வாக பிரிவு அதிகாரி உட்பட சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள், நீதிபதிகள், வவுனியா அரசாங்க அதிபர், வட மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.